/* */

தென்காசி மாவட்டத்தில் பாசன சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

thenkasi dam water opened for former cultivationதென்காசியில் பாசன சாகுபடிக்காக கருப்பாநதி மற்றும் அடவி நயினார் கோவில் அணை ஆகிய அணைகள் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் பாசன சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
X



தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் பிசான சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டது. கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருப்பாநதி நீர்த்தேக்கம் 72 கன அடி கொண்டது. கருப்பா நதி அணையின் கீழ் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் என மொத்தம் 9,514.70 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிசான சாகுபடிக்கு கருப்பாநதி அணையில் இருந்து 30-9-2022 நேற்று முதல் 26-2-2023 வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த அணையின் மூலம் வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர் உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறுகிறது. கருப்பாநதி அணை திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் ஆகாஷ், மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு அணையினை திறந்து வைத்தனர்.இதே போல் 132 கன அடி கொண்ட அடவிநயினார் கோவில் அணையும் இன்று திறக்கப்பட்டது. அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுக பாசனம் மூலம் 7,643.15 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிசான சாகுபடிக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 30-9-2022 நேற்று முதல் 26-2-2023 வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம், 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2022 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...