/* */

தென்காசி மாவட்டத்தில் சரவெடி பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை

தென்காசி மாவட்டத்தில் சரவெடி பட்டாசு விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்து கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் சரவெடி பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

எதிர்வரும், தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின் போது, மருத்துவமனைகள்,வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம்கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோசேமித்து வைக்கவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனைசெய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழிகாட்டு நடைமுறைகளைமீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது.

உரிமம் பெற்ற பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனைசெய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரசாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

புகைபிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை கடையில் வைப்பதோடு அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. மின்தடை ஏற்படும்பட்சத்தில் மெழுகுவர்த்தி,எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டார்ச், பேட்டரிவிளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும் போது அனைத்து மின் இணைப்புகளையும்துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், எண்ணெய்மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. உரிமம்பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள்விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து, பொதுமக்கள் 04633-290548 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 31 Oct 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!