/* */

குற்றால அருவிகளில் நீடிக்கும் தடை

Courtallam Falls Live Today -குற்றால அருவிகளில் குளிக்க, மூன்றாவது நாளாக தடை நீடிக்கிறது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் நீடிக்கும் தடை
X

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் குற்றாலம் பிரதான அருவி.

Courtallam Falls Live Today -மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால், குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து, அனைத்து பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. குற்றால பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டுகிறது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மூன்றாவது நாளாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்தது.

புலி அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் சீராக விடுவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். அங்கும் அருவியில் நீரோட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், குளிக்க தடை விதிக்கப்படும்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுப்பணி துறை மற்றும் நிர்வாகம் சார்பில் அணையில் நீர்மட்டம் மற்றும் மழையளவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 73.50 அடி

கொள்ளளவு: 212.55 மி.க.அடி

நீர் வரத்து : 432.00 கன அடி

வெளியேற்றம் : 60.00 கன அடி

ராம நதி

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 72.50 அடி

கொள்ளளவு: 76.33 மி.க.அடி

நீர்வரத்து : 94.28 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 53.81 அடி

கொள்ளளவு: 55.40 மி.க.அடி

நீர் வரத்து : 94.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

கொள்ளளவு: 18.43 மி.க.அடி

நீர் வரத்து: 47.00 கன அடி

வெளியேற்றம்: 47.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 82.50 அடி

கொள்ளளவு: 63.06 மி.க.அட

நீர் வரத்து : 62.00 கன அடி

வெளியேற்றம்: 35.00 கன அடி

மழை அளவு

ஆய்குடி:(கடையநல்லூர்)-88.00 மி.மீ

சங்கரன் கோவில்-22.00 மி.மீ

செங்கோட்டை-32.60 மி.மீ

சிவகிரி-66.00 மி.மீ

தென்காசி- 55.00 மி.மீ

கடனா -40.00 மி.மீ

ராம நதி-20.00 மி.மீ

கருப்பா நதி-60.50 மி.மீ

குண்டாறு- 29.80 மி.மீ

அடவிநயினார்- 27.00 மி.மீ.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Nov 2022 4:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...