/* */

தமிழகத்தில் புதிதாக அமைகிறது ஏ.டி.எஸ். தனிப்படை

உ.பி., மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎஸ் பிரிவு இயங்கி வருகிறது

HIGHLIGHTS

தமிழகத்தில் புதிதாக அமைகிறது ஏ.டி.எஸ். தனிப்படை
X

பைல் படம்

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் சமீபத்தில் கார் குண்டு வெடித்தது. பலரை கொல்லும் திட்டத்துடன் ஜமேஷா முபின் என்பவர் காரில் சென்றபோது எதிர்பாராதவகையில் குண்டு வெடித்து உயிரிழந்தார். பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு விட்டாலும், இதன் பின்னணியில் பயங்கரவாத செயல்பாடு உள்ளது என்பதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு படையை உருவாக்க வேண்டும் என மாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, டி.ஜி.பி., அலுவலக வட்டாரத்தகவல்கள் தெரிவித்துள்ள விவரம் : தமிழகத்தில் பயங்கராவதிகள் செயல்பாடு மற்றும் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த, போலீஸ் துறையில் உளவுப் பிரிவு உள்ளது. அதன் உட்பிரிவாக, உள்நாட்டு பாதுகாப்பு இயங்கி வருகிறது. உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவஆசீர்வாதம், அதன் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் கீழ், கியூ பிரிவு, சிறப்பு பிரிவு என இரண்டு பிரிவுகள், பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து, உளவு தகவல்களை திரட்டி வருகின்றன. பயங்கரவாத சித்தாந்தம் அடிப்படையில் இயங்கும் பல்வேறு குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்து, கட்டுப்படுத்தும் பணியை கியூ பிரிவு செய்து வருகிறது.

மத அடிப்படைவாத அமைப்புகள், அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, மத பயங்கரவாதத்தை தடுக்கும் வேலையை சிறப்பு பிரிவு செய்து வருகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் பயங்கரவாத செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தலைமைக்கு தெரிவிக்கும். அந்த தகவல், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசாருக்கு அனுப்பப்படும். அப்பகுதி சட்டம் ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுப்பர்.

இது தான் நடைமுறை. சட்டப்பூர்வமாக வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, உள்ளூர் போலீசாரின் பணி. ஆனால், உளவுப்பிரிவு மேலிடம் கொடுக்கும் தகவல் குறித்து, உள்ளூர் போலீசார் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.சொல்லப் போனால், அவர்களுக்கு இருக்கும் ஏராளமான பணிகளுக்கு இடையே, உளவுப்பிரிவு மேலிடம் கொடுக்கும் தகவல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்பதே உண்மை.

கோவை கார் குண்டு வெடிப்புக்கு முன்பே, தமிழகம் முழுக்க இருக்கும் பயங்கரவாதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் என்னென்ன செய்யக் கூடும் என்பது வரை, உள்ளூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒன்று தான் கோவை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டோர் குறித்த தகவல்.வழக்கம் போல, பல்வேறு பணிகளுக்கு இடையே, கோவை மாநகர போலீசார், அதில் தீவிர கவனம் செலுத்த முடியாமல் போ னது. கார் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்து விட்டது.

இந்த நிகழ்வுக்கு பின், என்ன தான் உளவுப்பிரிவு போலீசார் முன்கூட்டியே தகவலை சேகரித்து கொடுத்தாலும், உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்படாத வரை, குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும் என்பதை காவல் துறை புரிந்து கொண்டது.

இதன் காரணமாகவே, உ.பி., மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார், தில்லி, கர்நாடகம், கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏ.டி.எஸ்., பிரிவைப் போல தமிழகத்திலும் ஏற்படுத்துவது என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 17 Nov 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!