/* */

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசு பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு விழா

நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசு பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு விழா
X

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசுப்பள்ளி ஆசிரியை மாலதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு விழா.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியை மாலதி. இவர் கடந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக இணையதள வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள பிற மாணவர்களும் பங்கேற்கும் வகையில் பங்கேற்று பயன் பெறும் வகையில் இந்த இணையதள வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இதில் இருபத்தி ஆறு மணி நேரம் தொடர்ந்து இணையதள வகுப்பு நடத்தி சாதனை படைத்துள்ளார் இந்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஆசிரியை மாலதியை பாராட்டும் விதமாக தென்காசியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி தாளாளர் மாரியப்பன் யோகா பயிற்சியாளர் மருது பாண்டியன், தமிழக நோபல் வேர்ல்ட் புக் ரெக்கார்ட் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் பாராட்டி பேசினர் நிறைவாக ஆசிரியை மாலதி ஏற்புரை நிகழ்த்தினார் கற்றல் இடைவெளியை குறைப்பதற்கான இந்த இணைய வழி வகுப்பை நடத்தியதாகவும் மேலும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வருகிற 4ம் தேதி முதல் இணையவழி வகுப்பை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 4 April 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  2. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  3. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  8. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  9. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  10. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்