/* */

யோகா, சமூக விழிப்புணர்வில் சாதனை: தென்காசி மாணவிகளுக்கு பாராட்டு

யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு.

HIGHLIGHTS

யோகா, சமூக விழிப்புணர்வில் சாதனை: தென்காசி மாணவிகளுக்கு பாராட்டு
X

யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரத்தை சார்ந்த கூலித்தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மகள் மிஸ்பா நூருல் ஹபிபா குற்றாலம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு பயிலும் போதிலிருந்தே யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் கற்று வருகிறார். மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் ஆசிய அளவில் யோகாசனப் போட்டிகளில் கலந்து சான்றிதழ்கள் பரிசுகள் வாங்கி குவித்து வருகிறார். போட்டிகள் மட்டுமில்லாமல் யோகா ஸ்கேட்டிங் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறார். தொடர்ந்து தேசிய அளவில் சாதனை சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்று வருகிறார்.

இவரை தொடர்ந்து பல்வேறு யோகாசன நிகழ்வுகள் திறனாய்வு போட்டிகளில் பங்கு பெற்ற இரவணசமுத்திரத்தை சேர்ந்த குற்றாலம் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாஜிதா, எட்டாம் வகுப்பு மாணவி அப்ஷான், ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ஜெய்த்துன் முஷிரா, திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் ஆண்டு நிறைவு மாணவி ஜாஸ்மின் மீரா போன்ற மாணவிகளை இரவணசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் கோவிந்த பேரி கூட்டுறவு சங்கத்தலைவர் உச்சிமாகாளி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மாணவிகளை மென்மேலும் வளர்ந்து தமது கிராமத்திற்கும் நாட்டிற்கும் பெயர் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு ஆசிரியர் குரு கண்ணன் சமூக ஆர்வலர்கள் சேக் முகம்மது அலி, முன்தஸுர் மாணவிகள் குடுபத்தினர் ஊர் பொதுமக்கள் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தங்களது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் போன்ற அனைவருக்கும் மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 29 Oct 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...