வியாபாரியை கொலை செய்ய முயற்சி- 2 பேர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வியாபாரியை கொலை செய்ய முயற்சி- 2 பேர் கைது
X

கடையம் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரியை கட்டையால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம்,கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசீர்வாதபுரத்தில் வசித்து வரும் தாசன் பிரவீன் (25) என்பவர் கடையத்திலுள்ள கோவில் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு நபர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். பணம் கொடுங்கள் என்று தாசன் பிரவீன் அவர்களிடம் கேட்டதற்கு, எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி இருவரும் சேர்ந்து தாசன் பிரவீனின் தலையில் கட்டையால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தாசன் பிரவீன் கடையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட வல்லத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் சுரேஷ் (28) மற்றும் கொம்பமுத்து என்பவரின் மகன் கண்ணன் (30) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 31 March 2021 5:30 AM GMT

Related News