சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை

சுரண்டையில் பட்டப்பகலில் துணிகரம் 20 பவுன் நகை திருட்டு போலீஸ் வலை வீச்சு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன் மனைவி அம்சுராணி (63) ஜெபமணி பாலச்சந்திரன் திருநெல்வேலியில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் அம்சுராணி நேற்று பகலில் அருகில் உள்ள பிராத்தனை கூடத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுரண்டை போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில் வீட்டில் இருந்த 20 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2021 6:10 PM GMT

Related News