/* */

மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது

தொடர் மழை சுரண்டை பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது

HIGHLIGHTS

மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது
X

வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை சிவகுருநாதபுரம் சந்தை பஜாரில் வசித்து வரும் சிதம்பரம் மகன் ராமர் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியின் கிழக்குப் புற சுவரின் சுண்ணாம்புக் காரையானது தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. ஓடுகளால் ஆன மாடியின் சம்பாரம் ஒரு பக்கமாக கீழிறங்கி உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் குடியிருந்து வந்தவர் காயமின்றி தப்பினர்.

இதேபோல் இடையார்தவணை வடக்குத்தெருவில் திருமலை என்பவருக்கு சொந்தமான மண் சுவரிலான ஒரு அறை கொண்ட ஒட்டு வீட்டில் மாடசாமி மனைவி கோமதியம்மாள் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீடு தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் வீட்டில் குடியிருந்தவர்களை மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

Updated On: 15 Jan 2021 6:09 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!