/* */

சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயற்சி

சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேரை ஊர்மக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அரிவாளால் வெட்ட முயற்சி
X

சிவகங்கை காவல் நிலையம்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கோமாளிபட்டி கிராமத்தில் சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கோமதி. இவரது கணவர் மணிமுத்து. இவர்கள் கோமாளிபட்டியில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் கணவர் மணிமுத்துவை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அப்போது ஆட்கள் கூடியதால் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற கிராமத்து இளைஞர்களை அரிவாளால் வெட்டியதில் கருப்பசாமி, கருப்பையா, வாசுதேவன் ஆகியோர் காயமடைந்தனர்.

இருப்பினும், தப்ப முயன்ற மூன்று பேர்களையும் பிடித்து சிவகங்கை போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் , ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் கணவர் மணிமுத்துவை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர்கள், கீழப்பூவந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில், அன்பரசன், ராஜா என்பதும், இவர்கள் முன்று பேரும் தங்கள் ஊருக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராததால் ஆத்திரமடைந்து தாக்க முயன்றதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 31 July 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!