சிவகங்கை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

சிவகங்கை மருத்துவமனையில் கொரானாவிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ பிரிவு மையத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கொரானா தொற்று நோயாளிகளுக்கான படுக்கை மற்றும் ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகள் குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேலிடம் கேட்டறிந்தார்.

பின்பு 10 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டரை பார்வையிட்ட அமைச்சர், கொரானா தொற்று சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசி, இருப்பு குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு தேவையான பணியாளர்கள், போன்றவற்றை அரசிடம் பரிந்துரைத்து உடனடியாக பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மானாமதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழரசி தனக்கான முதல் தடுப்பூசியை செவிலியர்களின் மூலம் செலுத்திக் கொண்டார்.நிகழ்ச்சியில்,மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல்,சுகாதார அதிகாரிகள், முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 4:39 PM GMT

Related News