/* */

லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை விற்றதில்லை: கார்த்திசிதம்பரம் எம்பி பேட்டி

அரசு சொத்துகளை குறைவான தொகைக்கு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும் விற்பதற்கும் வேறுபாடு இல்லை என்றார்

HIGHLIGHTS

லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை   விற்றதில்லை: கார்த்திசிதம்பரம் எம்பி பேட்டி
X

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திசிதம்பரம் 

காங்கிரஸ் ஆட்சியில் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை தனியாருக்கு விற்றதில்லை என கார்த்திசிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு சொத்துக்களை குறைவான தொகையை பெற்று கொண்டு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும், விற்கிறதுக்கும் என்ன வித்யாசம் உள்ளது. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்காக இதை செய்கிறார்கள். தனியார் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்க லைசன்ஸ் கொடுக்கலாம். அதைவிடுத்து, மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கியதை கொடுக்கலாமா? லாபத்தில் இயங்கும் எல்ஐசி ஏன்? தனியாருக்கு கொடுக்க வேண்டும். இதேபோல்தான், சோவியத் யூனியன் உடையும்போது ரஷ்யாவில் நடந்தது. இச்செயலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில், லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தது கிடையாது. நஷ்டத்தில் இயங்கியதைத்தான் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. பாஜகவினர் இந்து மனுதர்ம சாஸ்திரப்படி சமுதாயத்தை கொண்டு வர நினைக்கிறார்கள். இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கி கொச்சைப்படுத்துகின்றனர் என்றார்.

Updated On: 26 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?