மலேசியாவில் விபத்தில் சிக்கிய இளைஞரை சொந்த ஊர் கொண்டு வந்த கலெக்டர்

மலேசியாவில் விபத்தில் சிக்கிய பாண்டியனை சொந்த ஊர் கொண்டுவர முயற்சி செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மலேசியாவில் விபத்தில் சிக்கிய இளைஞரை சொந்த ஊர் கொண்டு வந்த கலெக்டர்
X

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சி, நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த மாதம் விபத்தில் சிக்கி இந்தியா வருவதற்கு வழி இல்லாமல் தவித்த நிலையில் இவரது மனைவி பாண்டிமீனா,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனை நேரில் சந்தித்து, பாண்டியனை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிட கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் விரைந்து நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாக 23.03.2021, அன்று இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து பாண்டியை புதுக்கோட்டை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதே கோரிக்கையை சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், தமிழக மக்கள் மன்றம் தலைவர் ராஜ்குமார் ஆகியோரிடமும் உதவிகேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இவைகளின் பலனாக இன்று பாண்டியன் பத்திரமாக உறவினர்களிடம் சேர்க்கப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மக்கள் மன்றம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 25 March 2021 3:48 AM GMT

Related News