/* */

கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் சிவகங்கை வருகை

கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் சிவகங்கை வருகை
X

சிவகங்கையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த கூடுதலாக 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக இருந்த 100 கட்டுப்பாட்டு இயந்திரம் சிவகங்கை கொண்டு வரப்பட்டு ஆட்சியர் மதுசூதன் தலைமையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Updated On: 12 March 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?