/* */

சிவகங்கை மாவட்டத்தில் அக்னி வீர்வாயு திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு: ஆட்சியர் தகவல்

அக்னிவீர்வாயு தேர்விற்கு இணையதளம் வாயிலாக விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 31க்குள் விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் அக்னி வீர்வாயு திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

இந்திய விமானப்படையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு, இணையதளம் வாயிலாக விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 31.03.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கைமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு 17.03.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். இத்தேர்வு 20.05.2023 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 26.12.2002 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மற்றும் 26.06.2006 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.

மேலும், விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in -என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2023-க்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 28 March 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!