/* */

கல்லல் அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு: போலீஸார் சமரசம்

பட்டா இடத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் பாதையை அடைத்து வைத்தனர்

HIGHLIGHTS

கல்லல் அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு: போலீஸார் சமரசம்
X

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே மயானப்பாதை தொடர்பாக  கிராம மக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தும் போலீஸார்

கல்லல் அருகே இறந்தவரின் உடலை தங்களது பட்டா நிலத்தின் வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செவரக்கோட்டை, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், தங்கள் பட்டா இடத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சோலைமலை மற்றும் அவரது தரப்பினர் பாதையை அடைத்து வைத்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் மற்றும் தேவகோட்டை வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட சோலைமலை தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக, மூதாட்டியின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் இரு தரப்பு மோதல் தவிர்க்கப்பட்ட நிலையில், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல தங்களுக்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று, மூதாட்டியின் உறவினர்கள் வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.


Updated On: 14 Sep 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?