/* */

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

சேலம் அணைமேடு பகுதியில் ஒப்பந்ததாரை முற்றுகையிட்ட பொதுமக்கள். 

சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அணைமேடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யாமல் பணியாளர்கள் குழியை மூட முயன்றதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, சேதமடைத்த குழாய்களை ஒப்பந்ததாரர் வாங்கி கொடுத்தால் சீரமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் பணிகளை தொடங்க விடமாட்டோம் என்று ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 30 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  2. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  4. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  5. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  6. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  7. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்