/* */

உள்நாட்டு கைத்தறி ஜவுளிக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உள்நாட்டு கைத்தறி ஜவுளிக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சேலத்தில் கைத்தறி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உள்நாட்டு கைத்தறி ஜவுளிக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.

நாடு முழுவதும் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி முதல் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 20 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு