/* */

வேளாண் சட்டங்களை சட்ட ரீதியாக ரத்து செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

3 வேளாண் சட்டங்களையும் பாராளுமன்றம் மூலம் சட்டரீதியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை சட்ட ரீதியாக ரத்து செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனை வரவேற்று விவசாயிகள் கொண்டாடினர். 3 வேளாண் சட்டங்களையும் பாராளுமன்ற மூலம் சட்டரீதியாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 வேளாண் சட்டங்களையும் பாராளுமன்றம் மூலம் சட்டரீதியாக ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கிடைத்திட சட்டம் ஏற்றவேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்டம் 2020 மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உரிய இழப்பீடு மற்றும் நினைவுச் சின்னம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!