/* */

நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்குமாறு கோரிக்கை.

நிலுவையிலுள்ள தங்களது 4 மாத சம்பளத்தை வழங்கக் கோரியும் மீண்டும் தங்களை பணியமர்த்திடுமாறு வேண்டியும் மனு அளித்தனர்

HIGHLIGHTS

நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்குமாறு கோரிக்கை.
X

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க லந்த டெங்கு ஒழிப்பு தற்காலிக பணியாளர்கள்

ஊதியம் தர நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்குஒழிப்பு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணிவழங்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வாலாஜாப்பேட்டை நகராட்சியில் சம்பளம் தர நிதியில்லை என்று நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் கடந்த 10ஆண்டுகளாக டெங்கு கொசு ஒழிப்பு காய்ச்சல் தடுப்புபணிகளை நகாராட்சி ஊழியர்களுடன் தற்காலிகப் பணியாளர்கள் 30பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

அதில் தற்காலிக ஊழியர்களுக்கு நகராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக முறையாக சம்பளம்வழங்காமல் இழுத்தடித்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு நகராட்சி ஆணையர் சதீஷ் , தற்காலிக ஊழியர்கள் பணியாற்றியதற்கான 4மாத சம்பளத்தை நிதி இல்லை என்று பாக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அவரிடம் சம்பளம் வழங்க வேண்டுமென ஊழியர்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்ததாகவும், இருப்பினும் அவர் வழங்காமலேயே தற்காலிக டெங்கு ஒழிப்பு ஊழியர்களை காழ்ப்புணர்ச்சியுடன் நிதியை காரணம் காட்டி பணி நிறுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பிறகு , தற்போதுள்ள ஆணையரிடம் பலமுறை தற்காலிக ஊழியர்கள் தாங்கள் ஏற்கெனவே பணியாற்றி நிலுவையிலுள்ள தங்களது 4 மாதசம்பளத்தை வழங்கக் கோரியும் தங்கள் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு மீண்டும் தங்களை பணியமர்த்திடுமாறு கோரிக்கையை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு, அவரும் நிதியைக்காரணம் காட்டி பணிவழங்க மறுத்து வந்ததாக தற்காலிகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி அவர்கள் அனைவரும் நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கிடவும் கடந்த 10ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களது பணியை தொடர்ந்திட உதவிடுமாறும் இராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 1 Oct 2021 5:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது