/* */

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம்

ஆற்காட்டில் நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை யொட்டி நேரு யுவகேந்திர இளைஞர்களின் ஒற்றுமை ஓட்டதை கைத்தறி அமைச்சர் காந்தி பங்கேற்று தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை  முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம்
X

ராணிப்பேட்டையில் நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது

இராணிப்பேட்டைமாவட்டம் ஆற்காட்டில் நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஆஸாதி கா அம்ரீத் மகோத்சவ் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் 2.0 மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆற்காடு டெல்லி கேட் கலவை ரோடில் உள்ள 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா, இளைஞர்கள் சார்பில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

மேலும், ஓட்டத்தில் 2கிமீ தூரத்திற்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓடி வந்தனர்.

தொடர்ந்து ஓட்டமானது ஆற்காடு டெல்லி கேட்டில் தொடங்கி, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. வரும் வழியில் இளைஞர்கள் இந்தியா வெல்கவே என்ற முழக்கத்தோடு ஓடி வந்தனர்.

Updated On: 30 Oct 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது