/* */

பஞ்சாபில் வெற்றி: புதுகையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆம் ஆத்மி கட்சியினர்

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

HIGHLIGHTS

பஞ்சாபில் வெற்றி:  புதுகையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆம் ஆத்மி கட்சியினர்
X

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது எடுத்து புதுக்கோட்டையில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆம் ஆத்மி கட்சியினர்.

உத்ரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தேர்தல் அறிவிப்புகள் காலையிலிருந்து வெளியாகி முடிவுகள் வந்துகொண்டிருக்கிறது.

இதில் உத்திர பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.அதேபோல் மற்ற இடங்களிலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகித்து வரும் நிலையில், பஞ்சாபில் ஆளுகின்ற கட்சியை தோற்கடித்து புதிதாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி அதிக அளவில் வெற்றி பெற்று பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றியது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக அரவிந்த் கேஜரிவால் இரண்டாவது தடவையாக ஆட்சி செய்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் ஐந்து மாநில இடைத்தேர்தலில், பஞ்சாபில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் சவாலாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை அறிவித்திருந்தனர்.

இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் பஞ்சாபி பொறுத்தவரை அதிக அளவில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தனர்.இந்நிலையில் பஞ்சாபில் தனி பெரும்பான்மையாக ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக பஞ்சாபில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை கொண்டாடினர்.

Updated On: 10 March 2022 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!