/* */

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
X

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணிதொடர்புாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர் தகவல்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 01.08.2022 முதல் 31.03.2023 வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து http://www.nvsp.in என்ற இணையத்திலும் (அல்லது) வாக்காளர் உதவி மையம் (VOTERS HELP LINE – VHP) செயலி முலமாகவும் (அல்லது) GARUDA APP (அல்லது) தங்கள் பகுதிகளில் உள்ள -சேவை மையம் (அல்லது) மக்கள் சேவை மையம் ஆகியவை மூலம் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய படிவமான 6-B தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் உள்ளது. சுய அங்கீகாரத்துடன் (Self Authentication) வாக்காளர்கள் NVSP Portal / VHA Apps –ல் உள்ள படிவம் 6-B -ஐ நிரப்பி ஆதார் (UIDAI)ல் பதிவு செய்யப்பட்ட அவரது மொபைல் எண்ணை இணைக்கலாம். இருப்பினும் மக்கள் தொகை விவரங்களில் சில வேறுபாடுகள் இருப்பின் விண்ணப்பம் செய்வதில் தோல்வியுற சாத்தியகூறுகள் உள்ளன.

சுய அங்கீகாரம் இல்லாமல் (Without Self Authentication) வாக்காளர் சுய அங்கீகாரம் செய்ய விரும்பவில்லை அல்லது மேற்குறிப்பிட்டவாறு சுய அங்கீகாரம் தோல்வியுற்றதால் வாக்காளர் அங்கீகாரம் இல்லாமல் ஆன்லைனில் தேவையான இணைப்புகளுடன் படிவம 6-B சமர்ப்பிக்கலாம்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BOOTH LEVEL OFFICERS – BLO) வீடு வீடாக விசாரணைக்கு வரும் போது அவர்கள் கொண்டு வரும் படிவம் 6-B -ஐ வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். பெறப்பட்ட படிவம் 6-B ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் GARUDA APP மூலம் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) பயன்படுத்தப்படும் ERONET மூலம் 7 நாட்களுக்குள் கணினிமயமாக்கப்படும்.

ஆதார் எண் வழங்குவது முற்றிலும் தன்னார்வமானது. வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பதிவுகளை அங்கீகரிப்பதற்காகவும் எதிர்காலத்தில் சிறந்த தேர்தல் சேவைகளை வழங்குவதற்காகவும் ஆதார் எண்ணை வாக்காளர்களிடமிருந்து பெறுவதன் நோக்கம் ஆகும்.

வாக்காளர்களிடம் ஆதார் எண் இல்லை என்றால் கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும். MGNREGA Job Card (மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்ட அடையாளம்). வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம். தொழிலாளர் அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card Issued under the scheme of Ministry of Labour). ஓட்டுனர் உரிமம் (Driving Licence). நிரந்தர கணக்கு எண் அட்டை(PAN Card). தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று.

இந்தியக் கடவுச்சீட்டு (INDIAN PASSPORT). புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document with Photograph). மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை (Service Identity Card with Photograph Issued by Central/State Govt., PSUs, Public Limited Companies). பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை (Official Identity Card Issued to MPs/ MLAs / MLCs. இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையாளல் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (UDID Issued by Social Justice and Empowerment, Government of India) .

வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6-B மற்றும் இணைப்புகளை கணினி மயமாக்கப்பட்ட பிறகு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) அவர்களால் மிகுந்த பாதுகாப்பாக பராமரிக்கப்படும். மேலும் பெறப்படும் ஆதார் விவரங்களை முறையாக ஆதார் சட்ட விதிகளின்படி கண்டிப்பாக பாதுகாக்கப்படும். 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு முன் கூட்டியே விண்ணப்பிக்கலாம். அதாவது ஜனவரி 1-ம் தேதி, ஏப்ரல் 1-ம் தேதி, ஜுலை 1-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி அந்தந்த காலாண்டில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்.

இளைஞர்கள் தாங்கள் தகுதிபெறும் 18 வயதை அடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தபின் அந்த நபருக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொ) (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!