/* */

உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31ம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்

PM Kisan In Tamil - புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,28,995 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31ம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
X

PM Kisan In Tamil - உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31ம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை பெற பிஎம் கிசான் வலைத்தளதில் இ-கே.ஓய்.சி செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு,குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000- வீதம் ஆண்டிற்கு ரூ.6000- பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து,அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்திடும் பொருட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற குடும்ப அட்டை உள்ள ஒரு விவசாய குடும்பம் ஒரு அலகாக எடுத்துக் கொள்ளப்படும், ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். மேலும் 01.02.2019 அன்று வருவாய் கணக்கு சிட்டாவில் நில உரிமை பெற்றுள்ள நபர்களே இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். 01.02.2019க்கு பிறகு புதியதாக நில உரிமை பெறும் நிலங்களின் உரிமையாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிதி உதவி பெற தகுதியற்றவர்கள் ஆவர். 01.02.2019 அன்றைய தேதியில் நில உரிமையாளர் இறந்து விடும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொண்டால் வாரிசுதாரர் இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,28,995விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஊக்கத்தொகையானது ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும். எனவே தொடர்ந்து ஊக்கத்தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் விவரத்தினை சரிப்பார்த்து இ-கே.ஓய்.சி (e-KYC) செய்து பதிவை வருகிற 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.இதனை www.pmkisan.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று ஆதார் எண் மற்றும் ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்னை இ-கே.ஓய்.சி யில் உள்ளீடு செய்து ஆதார் விவரத்தினை உறுதி செய்யலாம். இவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்நு ஊக்கத்தொகை பெற முடியும்.எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இ-கே.ஓய்.சி செய்யுமாறு வேளாண் இணை இயக்குநர்(பொ) தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!