/* */

புதுமைப்பெண் திட்டம்: நவ 1 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை பதிவு செய்யலாம்

தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்றுள்ளனர்

HIGHLIGHTS

புதுமைப்பெண் திட்டம்: நவ 1 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை பதிவு செய்யலாம்
X

பைல் படம்

தமிழ்நாடு முதலமைச்சர் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழல்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர். தற்போது இவ்வலைத்தளத்தில் முதலாம் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்வியில் சேர்ந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை பெறுவர். 12ஆம் வகுப்பை முடித்து விட்டு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து தங்களது உயர் கல்வியை மாணவிகள் தொடரலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடையஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற் போது 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை -91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல் படிப்பு, தொழில் நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்பிக்கும் முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 1 Nov 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  2. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  4. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  5. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  6. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  7. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி