/* */

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
X

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு

புதுக்கோட்டை நகராட்சி என்பது நூற்றாண்டு கண்ட நகராட்சி ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி தொடங்கப்பட்டு 109 ஆண்டுகளாகிறது.

2006 முதல் 2011 வரை புதுக்கோட்டை நகராட்சி தலைவராக திமுக-வை சேர்ந்த ராமதிலகம் உடையப்பன் இருந்துள்ளார். அதன்பிறகு தற்போதுதான் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் இரண்டாவது பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்

புதுக்கோட்டை நகராட்சி பொருத்தவரை 42 வார்டுகள் உள்ளன 42 வார்டுகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்கள் 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள் 17 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்

இந்நிலையில் 42 வார்டுகளில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சித் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள பெண் நகராட்சித் தலைவருக்கு அதிக சவால்கள் உள்ளதாக பலமுறை நகராட்சி கவுன்சிலர்களாக இருந்தவர்களும் அரசியல் கருத்தாளர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சிக்கி தவிக்கிறது மேலும் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்தும் அனைத்து வீடுகளுக்கும் இன்னும் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது மேலும் சுகாதார சீர்கேடு என்பது புதுக்கோட்டை நகராட்சி அதிக அளவு உள்ளது

மேலும் நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் அதிக அளவு உள்ளது அதனை வசூல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோன்று ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் இருப்பதால் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு தேர்தலில் நிற்கும் பெண் உறுப்பினர்கள் தற்போது தங்களை தயார்படுத்தும் பணியில் இறங்க வேண்டும். அப்போதுதான் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பெண் தலைவர்கள் சுமூகமாக செயல்படும் நிலை ஏற்படும் இல்லை என்றால் தலைவர் பதவி அவர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 20 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?