/* */

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்கள் புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டு.

HIGHLIGHTS

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய  காவலருக்கு பாராட்டு
X

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் வெள்ளைச்சாமிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்

கீரனூர் அருகே நேற்று உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியருக்கு உதவி செய்து கொண்டிருந்த குன்னாண்டார்கோயில் ஆழ்வான் பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ். இவருக்கு திடீரென மின்சாரம் தாக்கி, மின்கம்பத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடையாளிப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சென்ற காவலர் வெள்ளைச்சாமி என்பவர் பொதுமக்களுடன் சேர்ந்து மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் என்பவரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கி சிபிஆர் முறையில் முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து இளைஞரை காப்பாற்றிய உடையாளிப்பட்டி காவல்நிலைய காவலர் வெள்ளைச்சாமியை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்று மற்றும் வெகுமதி வழங்கினார்.


Updated On: 24 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!