/* */

கொட்டும் மழையில் உடைந்த தரைப்பாலத்தை சரி செய்து கொடுத்த ஊராட்சி தலைவர்

கொட்டும் மழையிலும் உடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுத்த 9A நத்தம்பண்ணை ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

HIGHLIGHTS

கொட்டும் மழையில் உடைந்த தரைப்பாலத்தை சரி செய்து கொடுத்த ஊராட்சி தலைவர்
X

புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மழையால் உடைந்த தரை பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் ஏ வி எம் பாபு

புதுக்கோட்டை அருகே உள்ள 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ஏவிஎம் பாபு இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் தொடர்ந்து அப்பகுதி பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் எதுவாயினும் உடனடியாக நிறைவேற்றி தருவது அதுமட்டுமல்லாமல் சாலை வசதிகள் குடிநீர் வசதிகள் என பல்வேறு அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பது என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மழை நீர் சூழ்ந்த வீடுகளில் மழைநீரை அகற்றுவதற்கு உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணியை துரிதமாக நடவடிக்கை எடுத்து வீடுகளில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அபிராமி நகர் செல்லும் தரைப்பாலம் மழைநீரில் உடைந்து விட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்பாபு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தானே முன்நின்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தரை பாலத்தை சீர்செய்து போக்குவரத்துக்கு செல்வதற்கு வழி வகை செய்தார்.

தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாமல் தானே முன்னின்று பாலத்தை உடனடியாக சரி செய்து தந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 27 Nov 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்