ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்தை எட்டியது

நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக அதற்கான முன்னேற்பாடுகள், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்தை எட்டியது
X

நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள்

நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக ஆயுதபூஜை பொது மக்கள் கொண்டாடுவார்கள், குறிப்பாக வீடுகளில் ஆயுத பூஜையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவார்கள்.

தங்கள் வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளில் சாமி படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து பொதுமக்கள் வீடுகளில் ஆயுத பூஜையை கொண்டாடி வருவார்கள், அதனால் வருடம்தோறும் ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென விலை உயரும். இந்நிலையில் நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரண்டு மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ விலை ஆயிரம் ரூபாயை தொட்டது அதேபோல் மற்ற பூக்களின் விலையும் சாதாரண நாட்களில் கிலோ 10 ,15,20 ரூபாய் என இருந்த பூக்களின் விலை 40 ரூபாய் 50 ரூபாய் என இரண்டு மடங்கு மூன்று மடங்கு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை ஆயுத பூஜையை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளதால் விவசாயம் செய்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையினால் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 Oct 2021 4:40 AM GMT

Related News