/* */

திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு : மாணவ மாணவிகள் உறுதி ஏற்பு

கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வதென மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்

HIGHLIGHTS

திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு : மாணவ மாணவிகள்  உறுதி ஏற்பு
X

திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு குறித்த.                உறுதிமொழி எடுத்து கொண்ட.         மாணவ மாணவிகளுக்கு மாவட்ட.   சுற்றுச்சூழல் பொறியாளர்    குணசேகரன் உதவி பொறியாளர்   ராஜ ராஜேஸ்வரி ஆகியோர்    துணிப்பை வழங்கி   விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு குறித்து மாணவ மாணவிகள் உறுதி எடுத்து கொண்டனர்.

தமிழகத்தில் நெகிழிப் பைகளை ஒழிப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை தமிழகஅரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகத்தில் இனிமேல் நெகிழிப் பைகளை பயன்படுத்தாமல் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் நெகிழிப்பை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் மஞ்சப்பை அனைவரும் பயன் படுத்துவோம் என தமிழக முதலமைச்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டத்தை தொடக்கி வைத்தார்.

அதனை செயல்படுத்தும் விதத்தில், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் மற்றும் உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோரின் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நெகிழிப் பைகளை பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் விளைவிக்கும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும். தமிழக அரசு அறிவித்தது போல் அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை மற்றும் துணி பைகளை வழங்கி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்த மாட்டோம். வீடுகளில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், கடைகளுக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை கட்டாயம் இடத்துச் செல்வம் போன்ற விழிப்புணர்வு உறுதி மொழிகளை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் சரஸ்வதி ஆறுமுகம், தங்கராஜ், காசிநாதன், சமூக ஆர்வலர் முரளிதரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!