/* */

திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கடந்த அதிமுக ஆட்சியில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு , அங்கு இளைஞர்கள் உடல் நலன் பேண உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
X

திருப்புலிவனம் அம்மா பூங்காவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் இன்றி இரும்புகள் மட்டுமே காணப்படுகிறது.

உத்திரமேரூர் அருகே அம்மா பூங்காவை அரசு முறையாக பராமரிக்காதால் பூங்காவில் இருந்த உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மாயகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கால உணவு வகைகள் இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரையும் பாதிப்படையச் செய்து பல்வேறு உடல் உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. அதற்காக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் அறிவுரைக் கூறுவது ஒன்றே. அது நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகும்.


அவ்வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இளைஞர்கள் நலன் பெறும் வகையில் பூங்காக்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் ரூபாய் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வந்தது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் சற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் நல்ல சுவாச காற்றைப் பெறவும் உதவியாக இருந்தது. மேலும் இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை பெறுவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இதனால பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இங்கு ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்தி வந்தனர்

காலப்போக்கில் இந்த உடற்பயிற்சிக் கூடம் கவனிப்பாரின்றி பராமரிப்பு முற்றிலும் குறைந்து அங்கிருந்த உடற்பயிற்சி உபகரணங்கள் மாயமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனம் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உடற்பயிற்சி கருவிகள் மற்றும் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் பல மாயமாகி உள்ளது.

அதேபோல், இந்த பூங்கா குடிமகன்களின் கூடாரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இந்த பூங்காவை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். எனவே, அரசு அம்மா பூங்காவை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 May 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்