/* */

வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?

நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே உங்களை எரிச்சலடையச் செய்ய முடியும்?

HIGHLIGHTS

வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
X

வெறுப்பு - கோப்புப்படம் 

வெறுப்பு என்பது மனரீதியான, மிகவும் ஆழமான விருப்பமின்மை காரணமாகத் தோன்றும் ஓர் உணர்ச்சி ஆகும். இது பொதுவாக நபர்கள், பொருட்கள் அல்லது எண்ணங்களின் மீது ஏற்படும்.

பொதுவாக வெறுப்புடன் இருப்பவரிடம் கோபமும் மன அமைதியின்மையும் முகத்தில் நிதானமின்மையும் இருக்கும். வெறுப்பு தவிர்க்க முடியாத ஓர் உணர்வாகிறது. ஒரு பொருள், நபர், சமூகம் போன்ற ஏதாவது ஒன்றின் மீதான ஒருவரின் வெறுப்புக்கு ஆழமாக, அவருடைய உள் மனத்தில் தோன்றும் பல காரணிகளும் காரணங்களாக அமைகின்றன.

உங்களை எரிச்சலடையச் செய்பவர்களை எப்படி நேசிப்பது? இது ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆழமாய் எழும் ஒரு கேள்வி. அவர்களை அன்பு செய்வது போல நடிக்க வேண்டாம், அவர்கள் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும்.

சரி, அவர்கள் உங்களை எதற்காக எரிச்சலடையச் செய்ய வேண்டும்? நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே பதில். அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அவர்கள் இல்லை.


  • இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  • மனிதர்களின் நிறத்தைக் காரணம் காட்டி வெறுப்பது தவறு. எந்த நிறம் என்பது முக்கியமல்ல. அது தவறு அவ்வளவுதான்.- முகம்மது அலி
  • வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள் - முகம்மது அலி
  • ஒரு பக்கம் அன்பும், மறு பக்கம் வெறுப்பும், சில பக்கங்களில் எதிர்பார்ப்பும் தான் நீ நீயாகவே இரு என்று மீண்டுமொருமுறை உணர்த்தி விடுகிறது!
  • தனிமையை வெறுத்தேன், உன்னை கண்ட நாள் முதல்! இன்று உன்னையே வெறுக்கிறேன், தனிமையால்!
  • வெறுப்பை தந்து புறம் பேசி கூச்சலிடும் கூட்டத்தை விட, மன அமைதியை மட்டுமே தரும் தனிமை எனது நண்பனே!
  • நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
  • உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது...
  • பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை... இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை....
  • சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே... என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை....
  • சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...

  • பிறரிடம் பகிர முடியாத வேதனையைக் கூட ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்
  • என் அதீத ஆசையெல்லாம், என் மனம் கஷ்டப்பட்டும் போது. என் வார்த்தையை கேட்க ஓர் துணை வேண்டும் என்பதே.
  • வெளியே சிரிப்பது தெரிந்தவர்களுக்கு. உள்ளே சிதைபட்டு சிறைபட்டு கிடப்பது தெரியவில்லை ஏனோ...!
  • நினைக்கும் பொழுது இறககும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்
  • என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு புரிந்து கொள்ள மறுபவர்களுக்கும் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
  • யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை.
  • தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்.
  • என்னை பிரிய உன் மனம் உடன் பட்டதை எண்ணுகையில் விழிகள் கண்ணீரால் கரைகின்றன.
  • தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்து கொண்டால் இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.
  • நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை ஆனால் ஒருவரை நேசித்த பின்பு நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
  • ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்

உங்களிடம் வெறுப்பு உருவாகிவிட்டால் அது உங்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவிடாது. ஆக்கபூர்வமாக செயல்படவும் விடாது. அது எப்போதும் உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். அதனால் உங்கள் மீதே உங்களுக்கு குறை ஏற்படும். காலப்போக்கில் உங்களையே அது குருட்டுத்தனமான இருட்டு சிந்தனைக்குள் தள்ளிவிடும்.

நாம் விரும்பும் விஷயங்கள் ஒவ்வொருவரிடமும் நிறைய இருக்கின்றன. அவைகளை நாம் விரும்பி, ரசிக்கவேண்டும். நாம் விரும்பாத விஷயங்கள் எல்லோரிடமும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். அதை பெரிதாக்கி அவர்களை வெறுக்கக்கூடாது. வெறுப்பில்லாத வாழ்க்கை தெய்வீகமானது.

Updated On: 9 May 2024 9:16 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!