/* */

புதுக்கோட்டை நகராட்சி 41 -வது வார்டில் இலவச குப்பைத் தொட்டி வினியோகம்

புதுக்கோட்டை நகராட்சி 41 -வது வார்டில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச குப்பைத் தொட்டி வினியோகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகராட்சி 41 -வது வார்டில் இலவச குப்பைத் தொட்டி வினியோகம்
X

புதுக்கோட்டை நகராட்சி  41 வது வட்ட தி.மு.க. சார்பில் நகராட்சி பணியாளர்களுக்கு இலவசமாக குப்பைத் தொட்டி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் தினந்தோறும் அதிக அளவில் தெருக்களில் குப்பைகள் தேங்குகிறது.

ஒரு நாளைக்கு டன் கணக்கில் நகராட்சி ஊழியர்கள் 42 வார்டுகளிலும் சேரும் குப்பைகளை அகற்றி திருக்கட்டளை பகுதியிலுள்ள குப்பை மேட்டில் கொண்டு சென்று கொட்டி குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி மொத்தமாக சேகரித்து ஒரு இடத்தில் கொட்டி வைத்து குப்பைகளை பிரிப்பதற்கு நகராட்சி ஊழியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது என கருதிய 41 வது வட்ட தி.மு.க. நிர்வாகி இராசுகவிவேந்தன் தன்னுடைய சொந்த செலவில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 41 வது வார்டு பகுதியில் அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுப்பதற்காக நகராட்சி பணியாளர்களுக்கு இலவசமாக குப்பைத் தொட்டிகளை வழங்கினார்.

அதேபோல் 41 வார்டு முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் குப்பைகளை கொட்டுவதற்கு தன்னுடைய சொந்த செலவில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் குப்பைத் தொட்டிகளை வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை நகராட்சி பணியாளர்களுக்கு புதிதாக 41 வது வட்ட தி.மு.க. சார்பில் நிர்வாகி இராசுகவிவேந்தன் மற்றும் வட்ட செயலாளர்கள் முத்துக்கருப்பன், பிரேம் நிர்வாகிகள் ரமேஷ் சுரேஷ், பாக்யராஜ் உள்ளிட்டோர் நகராட்சி பணியாளர்கள் குப்பை தொட்டியை இலவசமாக வழங்கினர்.

Updated On: 19 Jan 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  8. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  10. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...