/* */

பிறந்தது கார்த்திகை மாதம் :மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

HIGHLIGHTS

பிறந்தது கார்த்திகை மாதம் :மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
X

புதுக்கோட்டை அய்யப்பன்கோயிலில் கார்த்திகை முதலா நாளில் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கினர்.

புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களுக்கு காளீஸ்வரக்குருக்கள் மாலை அணிவித்தார்.

இதுபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், தண்டாயுதபாணி திருக்கோயில் ,சீதாபதி விநாயகர்கோயில், குமரமலைபால தண்டாயுதபாணி திருக்கோயில், வரசக்தி விநாயகர் கோயிலில் உள்ள பூங்காநகர் ஐயப்பன் சந்நிதியில் இன்று அதிகாலை வேளையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் நடையானது மகர, மண்டல கால விளக்கு பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 27-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று (நவ.17) தொடங்கி டிசம்பர் 27-ஆம் தேதி வரையுடன் நிறைவடைகிறது. பின்னர் டிசம்பர் 30 -ஆம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை தொடங்கும். இதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை தரிசனத்துக்கு இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாகவும் பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு விரதத்தை தொடங்கினர். இதேபோல், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை அணிந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளது. மேலும், இன்று முதல் அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், குளிர்சாதனமில்லா பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.

இந்த பேருந்துகளின் முன்பதிவுகளுக்கு http://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 9445014452, 9445017793 என்ற செல்லிடப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Updated On: 17 Nov 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...