/* */

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 13,42,027 வாக்காளர்கள்:ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளில்  13,42,027 வாக்காளர்கள்:ஆட்சியர் தகவல்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023 இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று (05.01.2023) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

புதுக்கோட்டைமாவட்டத்தில் மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் 2023ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023 இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று (05.01.2023) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் - 2023-கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) இன்று (05.01.2023) வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள் மற்றும் 66 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் 2023ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில்(Final Electoral Roll) இடம் பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Electoral Roll) (09.11.2022இன் படி) மொத்தம் 13,40,076 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான சிறப்பு கருக்கமுறை திருத்தத்தின்போது 11,465 ஆண் வாக்காளர்கள், 13,530 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 25,004 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 9,934 ஆண் வாக்காளர்கள், 13,111 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 23,053 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-ன்போது 18,869 இளம் வாக்காளர்கள் (18-19 வயதுடையவர்கள்) வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குசாவடி மையங்கள் (Polling Stations) உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் (Designated Locations) உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), நகராட்சி ஆணையர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Jan 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்