/* */

தமிழ்நாடு தொழில்முதலீட்டுக்கழக கிளை மூடப்பட்டதற்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ கண்டனம்

கிளை மூடப்பட்டு ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகள் காரைக்குடியுடனும், இதர பகுதிகள் திருச்சி கிளையுடனும் இணைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தமிழ்நாடு தொழில்முதலீட்டுக்கழக கிளை மூடப்பட்டதற்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ கண்டனம்
X

பைல் படம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மூடப்பட்டதற்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக செயல்பட்டுவந்த தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் புதுக்கோட்டை கிளைமூடப்பட்டதற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக 1951-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (T.I.I.C). (THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LID.). புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நிதி உதவி செய்வது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசின் மானியத்தை நேரடியாக வினியோகம் செய்வது இதன் சிறப்பு அம்சம். இதன் புதுக்கோட்டை கிளை 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் மிகப்பெறும் பங்காற்றி உள்ளது.

ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகள், கடலை அறவை ஆலைகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலமாக நிதி உதவி பெற்று தொழில் தொடங்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. விராலிமலை, கீரனூர் பகுதிகளில் உள்ள பொறியியல் தொழில் நிறுவனங்கள், பெல் நிறுவனத்தின் சார்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை புதுக்கோட்டை கிளையின் நிதி உதவி பெற்று தொடங்கப்பட்டவை. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 3,000 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்பட்டள்ளது. இதன் மூலம் 1,500-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களும், 3,000-த்திற்கும் அதிகமான வாகன ஓட்டுநர்களும் நிதி உதவி பெற்று பயன் பெற்றுள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக கிளைகளைவிட அதிகமான அளவு புதுக்கோட்டை கிளை கடன் உதவி அளித்துள்ளது. பெற்ற கடனை வரவு வைப்பதிலும் புதுக்கோட்டை கிளை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

சிறப்பாக செயல்பட்டுவந்த புதுக்கோட்டை கிளையை எந்தக் காரணமும் இன்றி கடந்த ஆண்டு சிறிய அளவிலான கள அலுவலகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 30.09.2021 அன்று புதுக்கோட்டை கிளை நிரந்தரமாக மூடப்பட்டு, ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளை காரைக்குடி கிளையுடனும், இதர பகுதிகளை திருச்சி கிளையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, புதுக்கோட்டை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் மிகவும் கேடு விளைவிப்பதாகும். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின், புதுக்கோட்டை கிளை மூடப்பட்டிருப்பது, மாவட்ட வளர்ச்சிக்கு உகந்ததல்ல. பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதான் புதுக்கோட்டை மாவட்டம் வேளாண்துறையில் படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் கிளை புதுக்கோட்டையில் இருந்தால் வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்குவதற்கு பேருதவியாக இருக்கும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்;ச்சிக்கும், வேளாண்மை சார்ந்த தொழில்வளர்ச்சிக்கும், அதன் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (T.I.I.C) புதுக்கோட்டை கிளையை மீண்டும் தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2021 12:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்