/* */

கள்ளச்சாராய கரும்புள்ளி கிராமத்தில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராய கரும்புள்ளி கிராமத்தில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகத்தை சேர்ந்த கள்ளச்சாராய கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு தற்பொழுது மனம் திருந்தி வாழ்ந்து வரும் பயனாளிகள் சந்திரா ராஜப்பன், தனபால், பவுன்ராஜ் ஆகியோருக்கு தென்னை மரக் கன்றுகளை வழங்கினார்.

மேலும் கறம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஜி பாலகிருஷ்ணன் பரிசுகளையும் வழங்கினார்.

கிராம பொது மக்களுக்கு கிராம கலைக்குழு, மூலம் துண்டு பிரசுரம் வழங்கியும், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 தெரிவித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஜெரினா பேகம் ,ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல், மன நல மருத்துவர் அகல்யா, கலால் துறை தாசில்தார் மாரி, ஆலங்குடி தாலுகா இலவச சட்ட உதவி மையம் உறுப்பினர் வெங்கடேஷ், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசுந்தராதேவி, புதுக்கோட்டை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்ஆய்வாளர் குணமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!