/* */

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை
X

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 45 . இவருக்கு ரூபா தேவி என்ற மனைவியும் , ஹரி விக்னேஷ் என்ற மகனும் ,நந்தினி என்ற மகளும் உள்ளனர் . ஆறுமுகமும் , ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் , நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவரும் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்று விட்டனர் .

ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும் , நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர் . ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது , வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் . இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார் .

அதன்பேரில் , ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்த போது , வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததும் , மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை , ரூ .7,500 பணம் ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது . இது குறித்துபெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர் . மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா