/* */

உதகையில் கண் பரிசோதனை முகாம்

உதகையில் கண் பரிசோதனை முகாம்
X

32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உதகையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற வந்தோருக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவமுகாமில் ஓட்டுநர் உரிமம் பெற வந்த நூற்றுக்கணக்கானோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் குலோத்துங்கன், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன், போக்குவரத்து ஆய்வாளர் அப்துல்கலாம் உட்பட ரெட்கிராஸ் நிர்வாகிகள் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Jan 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது