/* */

தமிழக அரசை கண்டித்து இந்து முன்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் படுகரின மக்களின் ஹெத்தை கோயிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டுமென கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

தமிழக அரசை கண்டித்து இந்து முன்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்களை அரசு கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் இந்து முன்னணி கோரிக்கைகளான கோயில்கள் அரசின் பிடியில் வந்த பின் கடந்த 60 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. ஆயிரக்கணக்கான கோயில்களில் 7000 சிலைகளை காணவில்லை. 1700 சிலைகள் போலியானவை, என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தை கோயிலை கையகப்படுத்தும் அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், இது ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிப்பதாக கூறினார்.

இதுமட்டுமல்லாமல் கோவில் நகைகளை உருக்கும் அறிவிப்பைக் கண்டித்து எதிர்வரும் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலை காக்க போராட்டம் நடத்தினர்.

Updated On: 20 Oct 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...