/* */

எருமப்பட்டியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி

எருமப்பட்டியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
X

எருமப்பட்டியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி, எருமப்பட்டி பஸ்ஸ்டாண்டில் பேரணி நிறைவடைந்தது. அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வளர்இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டு, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட திட்ட அலுவலர் ஜான்சி ராணி, எருமப்பட்டி பிடிஓ.,க்கள் அருளாளன், குணாளன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் லதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  3. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  4. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  5. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  6. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  7. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  9. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்