/* */

நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு மலைப்பாதை: அமைச்சர்கள் ஆய்வு

நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்கும் பணியை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு  மலைப்பாதை: அமைச்சர்கள் ஆய்வு
X

நைனாமலை வரதராப்பெருமாள் கோயிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணி குறித்து, அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல், புதன்சந்தை அருகே நைனாமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், முக்கிய விசேஷ தினங்களிலும் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து செங்குத்தான 3500 சிறிய படிக்கட்டுகளில் ஏறிச்சென்று மலை மீதுள்ள வரதராஜ பெருமாளை தரிசிக்க செல்வார்கள்.

குழந்தைகளும், முதயோர்களும் இப்படி வழியே ஏறிச்செல்ல முடியாமல் அடிவாரத்தில் இருந்தே சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச்செல்கின்றனர். இக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் சென்று வரும் வகையில் மலைப்பாதை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு சிறிது தூரம் மட்டுமே பாதை அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப்பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பக்தர்கள் பலரும் அதிருப்தியைடந்தனர்.

தற்போது தமிழக அரசின் மூலம், இந்துசமய அறநிலையத்துறை முற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ரூ.13 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாமக்கல்லுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், நைனாமலை மலைப்பாதையை நேரில் பார்வையிட்டடு ஆய்வு செய்தனர். மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வானகங்களில் சென்று வரும் வகையில் விரைவில் மலைõப்பதை அமைக்கும் பணி துவக்கப்பட்டு போர்க்கால அடிப்பøடையில் முடிக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு