/* */

இராசிபுரம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு

ராசிபுரம் அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
X

இராசிபுரம் அருகே நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ராசிபுரம் வட்டம், பட்டணம் முனியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம், ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர், ஏழை, எளியோருக்கு அவர்கள் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் இந்த ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 3 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில், பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய். காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

முகாமில் கலந்துகொண்ட 784 பேருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், டவுன் பஞ்சாயத்து தலைவர் போதம்மாள், துணைத்தலைவர் பொன் நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!