/* */

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள், உரங்கள் தேவைக்கேற்ப இருப்பு உள்ளது : டிஆர்ஓ

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள் மற்றும் உரங்கள், தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள், உரங்கள் தேவைக்கேற்ப இருப்பு உள்ளது : டிஆர்ஓ
X

நாமக்கல்லில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 716.54 மி.மீ. இந்த ஆண்டில், இம்மாத இயல்பு மழை அளவு, 323.51 மி.மீ., தற்போது வரை 396.89 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் அதி கமாக 73.38 மி.மீ. மழை அளவு பெறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜூலை வரை நெல் 491 ஹெக்டேர், சிறுதானிதானியங்கள் 23,132 ஹெக்டேர் பயறு வகைகள் 4 ,988 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 25,160 ஹெக்டேர், பருத்தி 890 ஹெக்டேர், கரும்பு 3, 847 ஹெக்டேர் என மொத்தம் 59,293 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா நெல் சாகுபடியை முன்னிட்டு, முன்னுரிமை அடிப்படையில் 2 ஆயிரம் மெ.டன் யூரியா மற்றும் ஆயிரம் மெ.டன் டி.ஏ.பி உரங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, விவசாயிகள், தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்றனர். நிகழ்ச்சியில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 Aug 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு