/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 65 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 56 மையங்களில், இன்று 8,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். 9 இடங்களில் 1330 பேருக்கு கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 65 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல், ஆக.5-

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 56 மையங்களில், இன்று 8,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். 9 இடங்களில் 1330 பேருக்கு கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று நடைபெறும் முகாமில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் மையங்கள்விபரம்:

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, செவந்திப்பட்டி, பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூலிப்பட்டி தொடக்கப்பள்ளி.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

நாமக்கல் வட்டாரம்: எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் , நாமக்கல், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி சார்பில் பணிபுரியும் இடம்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சோரி ஆரம்ப சுகாதார நிலைங்கள், வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையங்கள். பொத்தனூர் காட்டுத்தெரு அங்கன்வாடி மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: ஆண்டி வலசு, டி.கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி, எட்டிமமை விஷ்ணு வித்யாலயா பள்ளி.

பள்ளிபாளையம் வட்டாரம்: விளாங்காட்டூர், எதிர்மேடு தொடக்கப்பள்ளி, களியனூர் அக்ரஹாரம் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சி கிருஷ்ணவேணி பள்ளி, குமாரபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கல்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள். இராசிபுரம் அரசு மானிய ஏவிஎம் தொடக்கப்பள்ளி.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மேற்கண்ட மையங்களில் 8,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது.

கோவாக்சின்:

கீழ்க்கண்ட 9 மையங்களில் 1,330 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவனை மட்டும் போடப்படுகிறது.

பிள்ளாநல்லூர், இராசிபுரம் நகராட்சி, கல்லாங்காட்டு வலசு, மாரக்கால்காடு, எர்ணாபுரம், முதலைப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மோகனூர், மல்லசமுத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

Updated On: 5 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!