/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 369 பேர் வேட்பு மனு

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 307 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 369 பேர் வேட்பு மனு
X

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 307 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 369 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 447 வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஜன.28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று 3ம் தேதி நாமக்கல் நகராட்சியில் 6 பேரும், இராசிபுரம் நகராட்சியில் 71 பேரும், திருச்செங்கோடு நகராட்சியில் 8 பேரும், கொமாரபாளையம் நகராட்சியில் 28 பேரும், பள்ளிபாளையம் நகராட்சியில் 13 பேரும் என ஒரே நாளில் 126 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 5 நகராட்சியில் உள்ள 153 வார்டுகளுக்கு இதுவரை 147 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 294 வார்டுகள் உள்ளன. நேற்று ஆலாம்பாளையத்தில் 13 பேரும், அத்தனூரில் 4 பேரும், எருமப்பட்டியில் 8 பேரும், காளப்பநாய்க்கன்பட்டியில் 3 பேரும், மல்லசமுத்திரத்தில் 28 பேரும், மோகனூரில் 2 பேரும், நாமகிரிப்பேட்டையில் 34 பேரும், படைவீட்டில் 14 பேரும், பாண்டமங்கலத்தில் ஒருவரும், பரமத்தியில் 3 பேரும், பட்டணத்தில் 6 பேரும், பிள்ளாநல்லூரில் 15 பேரும், பொத்தனூரில் ஒருவரும், ஆர். புதுப்பட்டியில் 6 பேரும், சீராப்பள்ளியில் 15 பேரும், சேந்தமங்கலத்தில் 3 பேரும், ப.வேலூரில் 2 பேரும், வெங்கரையில் 2 பேரும், வெண்ணந்தூரில் 21 பேரும் என ஒரே நாளில் மொத்தம் 181 பேர் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 41 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 294 வார்டுகளுக்கு இதுவரை 222 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 447 வார்டுகளுக்கு இதுவரை 369 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Updated On: 3 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!