/* */

மகன் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்துக்கூற திருச்சி சிவா எம்.பி மறுப்பு

தனது மகன் பாஜகவில் இணைந்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருச்சி சிவா எம்.பி பதில் கூற மறுத்துவிட்டார்.

HIGHLIGHTS

மகன் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்துக்கூற திருச்சி சிவா எம்.பி மறுப்பு
X

திருச்சி சிவா.

நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. ராஜ்சயாப எம்.பி திருச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய நாட்டை பொறுத்த வரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல். ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற வேண்டும். இந்தி என்பது இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில் ஒன்று.

அந்த மொழி ஒன்றினை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. பல மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளடங்கிய இந்திய நாட்டில் அந்தந்த மொழிக்கு ஒர் முக்கியத்துவம் கிடைக்கும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்திட வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி மொழி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தி மட்டுமே என்ற நிலையை மத்திய அரசோ, வேறு அமைப்போ மேற்கொள்ளுமானால் அதனை எல்லா வகையிலும் போராடி தடுத்து நிறுத்தி ஆங்கிலம் தொடர்ந்திடுவதற்காக எல்லா முயற்சிகளையும் திமுக எடுக்கும் என்றார். உங்கள் மகன் சூர்யா, பாஜகவில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு அவர் பதில் எதுவும் கூறாமல் நழுவிச் சென்று விட்டார்.

Updated On: 9 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்