/* */

நாமக்கல்லில் மறைந்த ஏ.ஐ.எம்.டி.சி. தலைவர் செங்கோடன் நினைவுநாள் நிகழ்ச்சி

Memorial Day -நாமக்கல்லில் மறைந்த ஏ.ஐ.எம்.டி.சி. தலைவர் செங்கோடன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

Memorial Day | Namakkal News
X

நாமக்கல்லில் மறைந்த ஏஐடிஎம்சி தலைவர் செங்கோடன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Memorial Day - மறைந்த ஏ.ஐ.எம்.டி.சி. தலைவர் செங்கோடனின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலளர் வாங்கிலி மாலை அணிவித்தார்.

மறைந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் செங்கோடன் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நினைவஞ்சலி நிகழ்ச்சிநடைபெற்றது.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவராகவும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராகவும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றி வந்தவர் செங்கோடன்.

டிரான்ஸ்போர்ட் தொழிலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த அவர், லாரி உரிமையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அது, தன்னுடைய பிரச்சினையாக கருதி, அதை முடித்து வைக்கும் வரை போராடும் குணம் கொண்டவராக இருந்தார். டீசல் விலை உயர்வு, அதிக பாரம் தடை செய்தல், கி.மீ வாடகை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வரலாறு காணாத போராட்டங்களை நடத்தி அதில் சாதனை படைத்தார். லாரி உரிமையாளர்களுக்கு எதிராக அரசால் எந்த சட்டம் வந்தாலும் சமரசம் இல்லாமல் போராடி வெற்றி பெற்றதால் அவர் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். அவரின் சாதனைகளைப் பாராட்டி, டிரான்ஸ்போர்ட் ரத்னா, டிரான்ஸ்போர்ட் சாம்ராட் போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. சாலைப் போக்குவரத்து துறை வரலாற்றில் லாரி சங்க தலைவருக்கு சிலை வைத்துப் போற்றும் அளவுக்கு, லாரி உரிமையாளர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

கடந்த 2008ம் ஆண்டு செங்கோடன் காலமானார். அவரது நினைவு தினம் ஆண்டு தோறும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரது 14வது நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான வாங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்க உதவி தலைவர் சுப்புரத்திணம், துணைத்தலைவர் பாலச்சந்திரன், இணை செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சீரங்கன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, துணைத்தலைவர் செல்வம், செயலாளர் தாமோதரன், துணை செயலாளர் பரமசிவம், சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க உப தலைவர் பன்னீர்செல்வம், துணசெயலாளர் கவுசிகன், பொருளாளர் அம்மையப்பன், ஆட்டோ நகர் சங்கத் செயலாளர் கார்த்திக், பிஎஸ்ஏ டிரான்ஸ்போர்ட் அருள்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் செங்கோடன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Oct 2022 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!