/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

namakkal news today - நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் ஜூன்.3ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

namakkal news today
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர். 

namakkal news today - நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் ஜூன்.3ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிபின்படி, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

namakkal district news

இதையொட்டி வருகிற ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெற்று வரவேண்டும். பேச்சுப்போட்டி ஜூன் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!