/* */

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் : நவ.10ல் வாக்குப்பதிவு

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் : நவ.10ல் வாக்குப்பதிவு
X
லாரிகள்.

நாமக்கல்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற நவ.10ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்ள் மாநிலம் முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து வந்து, கடந்த 1987ம் ஆண்டு நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தோற்றுவிக்கபட்டது. அதன் தலைவராக செங்கோடன் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான போராட்டங்களை நடத்தி அவர் வெற்றிகண்டார். இதையடுத்து, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 95 சங்கங்கள் இணைந்து, தமிழக அளவில் மிகப் பெரிய சம்மேளனமாக உருவாகியது. அவர் கடந்த 2008ம் ஆண்டு வரை தலைவராக செயல்பட்டார்.


அவரது மறைவிற்குப் பிறகு, ஒரு முறை மட்டுமே சம்மேளன தலைவர் பதவிக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற நேரங்களில் ஒருமனதாக தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது சம்மேளன தலைவராக சங்ககிரி குமாரசாமி, செயலாளராக நாமக்கல் வாங்கலி, பொருளாளராக சேலம் தன்ராஜ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது பதவிக்காலம் முடிவடைவதால், சம்மேளனத்திற்கு 2022-2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 95 லாரி உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த, ஒவ்வொரு சங்கத்திற்கும் 5 நிர்வாகிகள் வீதம் 475 பேர் வாக்களித்து நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.

தலைவர் பதவிக்கு நாமக்கல்லைச் சேர்ந்த வாங்கிலி, சேலத்தைச் சேர்ந்த தன்ராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். துணைத்தலைவர் (தெற்கு மண்டலம்) பதவிக்கு மதுரையைச்சேர்ந்த சாத்தையா, துணைத்தலைவர் (வடக்கு மண்டலம்) தர்மபுரியைச் சேர்ந்த நாட்டான் மாது, துணைத்தலைவர் (மேற்கு மண்டலம்) பதவிக்கு கோவையைச் சேர்ந்த முருகேசன், துணைத்தலைவர் (கிழக்கு மண்டலம்) பதவிக்கு திருச்சியைச் சேர்ந்த சுப்பு, துணைத்தலைவர் (மத்திய மண்டலம்) பதவிக்கு நாமக்கல்லைச் சேர்ந்த சின்னுசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 5 துணைத்தலைவர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

செயலாளர் பதவிக்கு பரமத்திவேலூரைச் சேர்ந்த செந்தில்குமார், திருச்சியைச் சேர்ந்த ராமசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இணை செயலாளர் (மேற்கு மண்டலம்) பதவிக்கு பவானி குமாரபாளையம் செல்வராஜா, இணை செயலாளர் (கிழக்கு மண்டலம்) பதவிக்கு திருத்துறைப்பூண்டி ஆறுமுகம், இணை செயலாளர் (வடக்கு மண்டலம்) பதவிக்கு சென்னை ராஜேஷ், இணை செயலாளர் (மத்திய மண்டலம்) எடப்பாடி சுப்ரமணி, ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்றொரு இணை செயலாளர் (தெற்கு மண்டலம்) பதவிக்கு பெரியகுளம் நிஜாத் ரஹ்மான், தூத்துக்குடி முருகன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சீரங்கன், நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைவர், செயலாளர், இணை செயலாளர் (தெற்கு மண்டலம்), பொருளாளர் ஆகிய 4 பதவிகளுக்கு தலா 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு, வருகிற நவ.10ம் தேதி, நாமக்கல் வள்ளிபுரம் அருகில் உள்ள மாநில சம்மேளன கட்டிடத்தில், காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 95 சங்கங்களை சேர்ந்த 475 நிர்வாகிகள் வாக்களித்து சம்மேளன புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, லாரி சங்க நிர்வாகிகளை சந்தித்து, வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், லாரி உரிமையாளர்களிடையே தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் குழு தலைவர் அனிதாவேலு, உறுப்பினர்கள் சென்கேசவன், முத்துசாமி, கந்தசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Updated On: 24 Oct 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்